cவிஜயகாந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து!

public

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாகக் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவரது உடல்நிலை ஓரளவு சீரடைந்ததைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் 3 மணியளவில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இதற்கிடையே விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவியது. இதையடுத்து விஜயகாந்த்துக்கு வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன. விரைவில் அவர் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தேமுதிக கட்சி அலுவலகம் அறிவித்தது.

இந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று காலை (செப்டம்பர் 2) விஜயகாந்த் வீடு திரும்பியுள்ளார்.

வீடு திரும்பிய அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியிருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மேலும் முழுமையான அளவில் விரைந்து உடல்நலன் பெற்று,பொது வாழ்வுப் பணிகளை முன்னெப்போதும் போல் தொடர வேண்டும் என்ற எனது விழைவினைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *