cரொமாண்டிக் காமெடியில் ஹரிஷ் கல்யாண்

Published On:

| By Balaji

ரொமாண்டிக் கதாநாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது காமெடி திரைக்கதையைக் கொண்ட படங்களில் ஒப்பந்தமாகிவருகிறார்.

பியார் பிரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் ஆகிய படங்கள் ஹரிஷ் கல்யாணுக்கு இளையோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுத்தந்தன. அடல்ட் கண்டண்ட், ரொமான்ஸ் ஆகியவற்றை பின்புலமாகக் கொண்ட திரைக்கதைகளை கேட்டுவந்த அவர் தனுசுராசி நேயர்களே என்ற நகைச்சுவை கலந்த படத்தில் ரியா சக்ரபோர்த்திக்கு ஜோடியாக நடித்துவருகிறார். சஞ்சய் பாரதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் வெற்றிபெற்ற விக்கி டோனர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். ஆயுஷ்மான் குராரா நடித்த இந்தப் படத்தை தமிழில் கிருஷ்ணா மாரிமுத்து இயக்குகிறார். யுத்தம் சரணம் என்ற படத்தின் மூலம் இவர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

விந்து தானம், கருவுறாத் தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவான படம் விக்கி டோனர். ரசிகர்களின் வரவேற்போடு விருதுகளையும் பெற்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘தாராள பிரபு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[அமமுக தோல்விக்கான காரணங்கள்: அறிக்கை அனுப்பிய நிர்வாகிகள்!](https://minnambalam.com/k/2019/05/27/15)

**

.

**

[தலித்திய தனிமைப்படுதல் என்னும் அபாயம்!](https://minnambalam.com/k/2019/05/27/17)

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[வரப் போகும் நாட்கள் கடினமானவை: சோனியா](https://minnambalam.com/k/2019/05/27/18)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share