cபிரதமரைச் சந்திக்கும் உ.பி. முதல்வர்!

public

உத்தரப்பிரதேசத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்ற ஆதித்யநாத் பிரதமரையும் மத்திய அமைச்சர்களையும் பாஜக தேசியத் தலைவர்களையும் இன்று சந்திக்கிறார்.

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக பிரதமரை இன்று நாடாளுமன்றத்தில் சந்திக்கவிருக்கிறார் ஆதித்யநாத். இன்று டெல்லி புறப்படும் ஆதித்யநாத், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை காலை 11.30 மணிக்கு சந்திக்க உள்ளார். பிறகு மதியம் 12.10 மணிக்கு பிரதமரைச் சந்திப்பார். பிறகு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அவரின் வீட்டுக்குச் சென்று சந்திக்கவுள்ளார். பிறகு ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜியை சந்திக்கவுள்ளார். பிறகு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவையும்,வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும்,கட்சி மூத்த தலைவர் லால்கிருஷ்ண அத்வானியையும் அவர் சந்திக்க உள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *