cபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை!

Published On:

| By Balaji

பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத வரையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சுஷ்மா ஸ்வராஜ், “பயங்கரவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் விரும்பவில்லை. பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது. பயங்கரவாதமே இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெருந்தன்மையுள்ள ஆட்சியாளர் என சிலர் கூறுகின்றனர். அவருக்கு அவ்வளவு பெருந்தன்மை இருந்தால் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு எவ்வளவு பெருந்தன்மை இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

மீண்டும் மீண்டும் இருதரப்பு உறவுகளை சீர்குலைக்கும் ஐஎஸ்ஐ அமைப்பையும், பாகிஸ்தான் ராணுவத்தையும் அந்நாட்டு அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் மசூத் அசாரை ஐநாவின் பாதுகாப்பு குழுவில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கு சீனா நான்காவது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதுகுறித்து பேசிய சுஷ்மா ஸ்வராஜ், ஐநா பாதுகாப்பு குழு ஒரு விளை பயனற்ற அமைப்பு எனவும், சர்வதேச அரசியல் நிலையை அது பிரதிபலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share