நயன்தாரா நடித்துவரும் கோலமாவு கோகிலா பட புதிய புரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி கவனம்பெற்று வருகிறது.
அறம் படத்தையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படமான கோலமாவு கோகிலாவிலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படம் ஆகஸ்ட் 10, அதாவது கமலின் விஸ்வரூபம் 2வுடன் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன் பின்னர் ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு ஆகஸ்ட் 17க்குத் தேதியை மாற்றிவைத்தது.
படத்தைத் தொடர்ந்து விளம்பரம் செய்துவரும் படக்குழு அந்த வரிசையில் தற்போது புதிய பாடல் புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. ‘திட்டம் போடத்தெரியலை’ என தொடங்கும் பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்த வீடியோ பாடலில் இசையமைப்பாளர் அனிருத் தோன்றி நடித்துள்ளார். கையில் பேஸ் பால் மட்டையுடன் வலம்வரும் அவர் பாடல் முழுவதுமே நடித்திருக்கிறார்.
ஏற்கெனவே யோகிபாபு – நயன்தாரா தோன்றி நடித்திருந்த கல்யாண வயசு பாடல் வெளியாகி இணையத்தைக் கலக்கியிருந்த நிலையில் தற்போது [இந்தப் பாடலும்](https://www.youtube.com/watch?v=cQ_wKOpz6rQ) கவனம் பெற்று வருகிறது.�,