மக்களவைத் தேர்தல் முடிவடைந்த அடுத்த நாளிலேயே பெட்ரோல் விலை உயர்வு தொடங்கிவிட்டது.
17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான 7 கட்ட தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி நேற்று (மே 19) முடிவடைந்துள்ளது. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயத்தில் அரசு கவனமாக இருந்தது. விலை அதிகமாக உயர்த்தப்பட்டால் மக்களின் வாக்குகள் குறைந்துபோகலாம் என்பதால் விலை உயர்வில் கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் தற்போது தேர்தல் முடிவுற்றுள்ள நிலையில் பெட்ரோலியப் பொருட்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. பெட்ரோல் விலை 10 காசுகள் வரையிலும், டீசல் விலை 16 காசுகள் வரையிலும் உயர்ந்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனத்தின் விலை நிலவரங்களின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.12 ஆகவும், டீசல் விலை ரூ.66.11 ஆகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 73.72 ரூபாயிலிருந்து 73.82 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, டீசல் விலை 69.72 ரூபாயிலிருந்து 69.88 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேசச் சந்தையில் இன்று கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாகவே இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில் பெட்ரோல் விலை 4 ரூபாய் உயர்ந்துள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களது விநியோகத்தைக் குறைத்துக்கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளதாக சவுதி அரேபிய நாட்டின் ஆற்றல் துறை அமைச்சர் காலித் அல்ஃபலி கூறியிருந்தார். கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 77 சதவிகிதம் உயர்ந்து 72.98 டாலராக உள்ளது.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[வாக்குக் கணிப்பும் மக்கள் முடிவும்: தேர்தல் வரலாறு சொல்வது என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/18)
**
.
**
[தமிழகம்: திமுக கூட்டணிக்கே சாதகம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/20)
**
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
.�,”