cதியாகத்திற்கு தயாராக வேண்டும் : பாஜக!

Published On:

| By Balaji

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், பாஜக தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்யத் தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய அளவிலோ எதிர்க்கட்சிகளாக இருப்பவர்கள் அந்த திட்டத்தை எதிர்க்கவேண்டும் என்பது கட்டாயமல்ல. எதிர்க்கட்சி என்றால் அரசின் எல்லா திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்பது விதியும் அல்ல. நல்ல திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றது.

ஆனால் இது போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தும்போது எதிர்க்கட்சிகள் மக்களிடம் தவறாக எடுத்து சொல்லி மக்கள் மனதை மாற்றி விடுகின்றனர். இதனால் மக்கள் தங்களுக்கு எந்த திட்டம் நல்லது என்று தெரியாமலேயே போராட்டத்தை நடத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு விவசாயத்திற்கு எப்போதும் உறுதுணையாகவே இருந்து வருகின்றது இவ்வாறு அவர் பேசினார் மேலும் நிலக்கரி, பெட்ரோல், ஹைட்ரோ கார்பன், இரும்பு தாது போன்றவை ஒரு மாநிலத்தின் இயற்கை வளமாகும். இவற்றை பயன்படுத்தும்போதுதான் அந்த மாநிலத்தின் தொழில்வளம் பெருகும், பொருளாதார வளர்ச்சி உயரும் என இல. கணேசன் குறிப்பிட்டார்.

பொன். ராதா கிருஷ்ணன்

அதேபோல், மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் கன்னியாகுமரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ,மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம். எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு தமிழகத்தில் திணிக்காது. எந்த திட்டம் கொண்டு வந்தாலும் வேண்டாம் என்று சொன்னால், அதன் விளைவு தான் என்ன? ஆழ்ந்து சிந்திக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக மத்திய அரசின் திட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. தமிழர்களை முட்டாள்களாக்கும் செயல்களில் பல அமைப்புகள் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

தமிழிசை சவுந்தரராஜன்

ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் எதிர்காலம் கடுமையாக பாதிக்கும் . ஒரு திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது முடியாத செயல். அதிலும் அரசியல்வாதிகள் மாணவர்களை போராட அழைப்பது மிகவும் தவறு. மேலும் 2009இல் ஆராய்ச்சி துவங்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பாஜக அரசுகொண்டு வருவது போன்ற போலியான தோற்றத்தை உருவாக்குவது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel