,
இந்தியாவின் முதல் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.
இந்தியா முழுக்க அனைத்துத் திரையுலகிலும் சமீபகாலமாக நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் அதிகளவில் உருவாகிவருகின்றன. அந்த வரிசையில் தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயனின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தில் நடிக்க உபேன் படேலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.
பாலிவுட் நடிகரான உபேன் படேல் விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘ஐ’ படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார். தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ் இணைந்து நடிக்கும் ‘பூமராங்’ படத்தில் நடித்துவருகிறார். பந்தய கார்கள் மீது விருப்பம் கொண்ட உபேன் படேல், நரேன் பயோ பிக் படத்தில் தான் நடிப்பது தொடர்பாக அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.
தமிழ், இந்தி என இருமொழிகளில் தயாராகவுள்ள இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழு குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
�,