தபால் தேர்வுகளில் தமிழ் மறுப்பு விவகாரத்தில் தமிழகம் மனம் மாறாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடன இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இன்று (ஜூலை 14) சென்னையில் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒரு தொழில்நுட்ப கலைஞனாக நான் தொடங்கிய இடம் இது. இங்கு பல அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களும், நடன அணிகளும் இருக்கின்றனர். இந்தக் குழுமம் தொடர்ந்து செயல்பட்டு பல திறமைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக இங்கு வந்திருக்கிறேன். என்னுடைய பல வீடுகளில் மிக முக்கியமான வீடு இது. தேர்தலில் வெற்றிபெறுபவர்களுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.
தபால் துறை தேர்வுகளை இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும்தான் எழுதமுடியும் என்று வெளியாகியுள்ள அறிவிப்பு குறித்து கமல்ஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர், “இதை நான் மாணவப் பருவத்திலிருந்தே எதிர்த்து வருகிறேன். இப்போது மனமாற்றம் செய்திருப்பேன் என மத்திய அரசு எதிர்பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழகத்திற்கு அந்த மனமாற்றம் ஏற்படாது என்று உறுதியாக, உயிர்த்துடிப்புள்ள தமிழனாக என்னால் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.
தமிழகத்திலிருக்கும் தண்ணீர் பிரச்சினை குறித்தும், நீர் சேமிப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “நீரை சேமிப்பதுதான் ஒரே வழி என்று எனக்குத் தோன்றுகிறது. அரசை எதிர்பார்க்காமல் தனிநபர்களும் நீர் சேமிப்பில் பங்களிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
�,”