Rதமிழகத்தின் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஐந்து பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவக் குழுவினர் இன்று சென்னை வரவுள்ளனர்.
‘தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவரும் நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயற்சிக்கவில்லை; மாறாக தங்களுடைய உட்கட்சிப் பிரச்னையையே கவனித்து வருகின்றனர்’ என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், ஆட்சியாளர்கள் தரப்பிலிருந்தோ, டெங்கு காய்ச்சல் விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துவருகின்றனர்.
இதற்கிடையே முன்பு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் உதவி கோரலாம்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து நேற்றைய தினம் பிரதமரைச் சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், “டெங்கு பாதிப்புகள் குறித்து பிரதமரிடம் எடுத்துரைத்தேன். எனவே, தமிழகத்தின் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் மருத்துவக் குழு விரைவில் வரவுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி தமிழகத்தின் டெங்கு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, ஐந்து பேர் கொண்ட மத்திய அரசின் மருத்துவக் குழுவினர் இன்று (அக்டோபர் 13) சென்னை வரவுள்ளனர். இந்தக் குழு முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேரில் ஆய்வு செய்யவுள்ளது.�,