cடி.ஆர். விமர்சனம்: கண்கலங்கிய தன்ஷிகா

public

மீரா கதிரவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ‘விழித்திரு’. இந்த படத்தில் கதாநாயகியாக தன்ஷிகா நடித்துள்ளார். இவர்களுடன் விதார்த், எஸ்.பி.பி.சரண், வெங்கட் பிரபு, அபிநயா, தம்பி ராமையா, பேபி சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மேலும் டி.ராஜேந்தர் ஒரு பாடல் ஒன்றை எழுதி, பாடி நடித்துள்ளார். அக்டோபர் 6ஆம் தேதி படம் வெளிவரவுள்ள நிலையில், படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று (செப். 28) மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தன்ஷிகா மேடையிலிருந்த யாரையும் குறிப்பிடாமல் படத்தைப் பற்றி மட்டும் பேசிவிட்டு அமர்ந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து வந்து பேசிய டி.ராஜேந்தர், **”விழித்திரு படத்துக்குப் பிறகுதான் கபாலி படத்தில் நடித்தார் தன்ஷிகா. சூப்பர்ஸ்டார் கூட நடித்த உடனே நான் யாரென்று இப்ப கேட்டுகிட்டு இருக்கு. இதுதான் உலகம். மேடையில் பேசும்போதுகூட என் பெயரைச் சொல்லவில்லை. நீயெல்லாம் (தன்ஷிகாவை பார்த்து) என் பெயரைச் சொல்லியா நான் வாழப்போகிறேன். ஹன்சிகாவைப் பற்றியே கவலைப்படாதவன் தன்ஷிகாவைப் பற்றியா கவலைப்படப்போகிறேன்”** என்றார்.

இதனையடுத்து அவரிடம் தன்ஷிகா மன்னிப்புக் கேட்டபோதும், அதை ஏற்காத டி.ஆர். தொடர்ந்து தன்ஷிகாவைப் பற்றி விமர்சித்துப் பேசியதால் அவர் கண்கலங்கினார். தொடர்ந்து பேசிய டி.ஆர்., **” நீங்கள் பெரிய நடிகை. தயவுசெய்து உட்காருங்கள். மலையோடு நடித்த பிறகு மடுவெல்லாம் தெரியாது. இது உலகத்தோட ஸ்டைலு. மேடை நாகரிகத்தை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். இதை தன்ஷிகாவுக்கு ஒரு அண்ணனா நான் கற்றுத்தருகிறேன். பெரிய படங்களில் நடிக்கும் தன்ஷிகா சிறிய படங்களின் விளம்பரத்திற்கு வருவதற்கு நன்றி.”** என்று குறிப்பிட்டார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0