Rஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி வாயிலாக மத்திய அரசு ரூ.96,483 கோடியை வசூலித்துள்ளது.
ஜூலை மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.15,877 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.22,293 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.49,951 கோடியும், செஸ் வரியாக ரூ.8,362 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ரூ.96,483 கோடியை மத்திய அரசு வசூலித்துள்ளது. இறக்குமதிக்காக ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் ரூ.24,852 கோடியும், செஸ் வரியில் ரூ.794 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய மே மாதத்தில் ரூ.95,610 கோடியும், ஏப்ரல் மாதத்தில் ரூ.94,016 கோடியும் ஜிஎஸ்டி வரியாக வசூலிக்கப்பட்டிருந்தது. ஜூலை மாதத்துக்கான வரித் தாக்கலில், மொத்தம் 66 லட்சம் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 64.69 லட்சமாகவும், ஏப்ரல் மாதத்தில் 62.46 லட்சமாகவும் இருந்தது. மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையைப் பொறுத்தவரையில், ஏப்ரல் முதல் மே வரையில் மொத்தம் ரூ.3,899 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.�,