Cசர்வதேச உணவு விலை உயர்வு!

public

2017ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் உணவுப் பொருட்களின் விலை 8.2 சதவிகிதம் உயர்ந்ததாக ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கை கூறுகிறது.

இதுபற்றி ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2014ஆம் ஆண்டுக்குப் பிறகு உணவுப் பொருட்களுக்கான விலைக் குறியீடு அதிகபட்சமாக 2017ஆம் ஆண்டில் 174.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. மேலும், உணவுப் பொருட்களின் விலை 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 8.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் உணவுப் பொருட்களுக்கான விலைக் குறியீடு 169.8 புள்ளிகளாக இருந்தது. இது நவம்பர் மாத விலைக் குறியீட்டை விட 3.3 சதவிகிதம் அதிகமாகும்.

இவ்வாறு மாதாந்திர அளவில் மொத்த உணவுப் பொருட்களின் விலை உயர்ந்ததற்குக் காரணம் தாவர எண்ணெய் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வுதான். கடந்த ஒரு ஆண்டில் சர்க்கரை தவிர அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் உயர்ந்திருந்தது. பால் பொருட்களுக்கான விலை மிக வேகமாக உயர்ந்து 31.5 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அதேபோல தாவர எண்ணெய்களின் விலை 3 சதவிகிதமும், உணவு தானியங்களின் விலை 3.2 சதவிகிதமும், இறைச்சிகளுக்கான விலை 9 சதவிகிதமும் உயர்ந்திருந்தது. மறுபுறம், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அதிக உற்பத்தி இருந்ததால் சர்க்கரை விலை 11.2 சதவிகிதம் சரிவைச் சந்தித்திருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *