cகேத்ரின் வாய்ப்பைப் பறிக்கும் காஜல்

public

=

போகன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக நடிக்க கேத்ரின் தெரசா ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தற்போது காஜல் அகர்வாலை அந்த வேடத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் திரைப்படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அரவிந்த் சாமி இணைந்து நடித்த திரைப்படம் போகன். லக்‌ஷ்மன் இயக்கிய இந்த படத்தை தெலுங்கிலும் அவரே இயக்குகிறார். ஜெயம் ரவி ஏற்று நடித்திருந்த நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் ரவி தேஜா நடிக்கிறார். தமிழில் கதாநாயாகியாக நடித்த ஹன்சிகாவுக்கு மாற்றாக தெலுங்கில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியது. ஆனால் கேத்ரினைவிட காஜல் தெலுங்கு திரையுலகில் பாப்புலர் நடிகையாக வலம் வருவதால் படத்தில் அவர் இணையும் போது வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில் இன்னும் சில தினங்களில் யார் ரவிதேஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்கள் என்பது தெரிந்துவிடும்.

அரவிந்த் சாமி தனி ஒருவனின் தெலுங்கு ரீமேக்கிற்குப் பிறகு வேறு எந்த ரீமேக் படத்திலும் நடிப்பதில்லை என்று கூறியதால், எஸ்.ஜே.சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திரைக்கதையின் இரண்டாம் பாகத்தில் செண்டிமெண்டலான காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் தெலுங்கு ரசிகர்களை மனதில்கொண்டு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0