டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வில் மொழித்தாள் நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-1,குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் தேர்வுகளை நடத்திவருகிறது. அதில், சார் பதிவாளர், வருவாய்த் துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
குரூப் 2 தேர்வில் வெற்றி பெற மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணல். இந்த மூன்று நிலைகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில் அவர்களுக்கு அரசுப் பணியிடங்கள் வழங்கப்படும். குரூப்-2 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டி என்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், “குரூப்-2 முதல் நிலைத் தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொது அறிவு வினாக்கள் அதிகரிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,