cகள்ளக்குறிச்சி தொகுதியில் பிரேமலதா?

Published On:

| By Balaji

கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக வேட்பாளராக பிரேமலதா போட்டியிடப்போவதாக அக்கட்சியில் இருந்தே செய்திகள் கசிகின்றன.

தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு தொகுதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி தொகுதியும் ஒன்று என்று அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்தின் மைத்துனரும், தேமுதிக செயலாளருமான சுதீஷ் மீண்டும் போட்டியிட விரும்பியிருக்கிறார். அதற்காக கள்ளக்குறிச்சியின் கள நிலவரத்தை ஆய்வு செய்தார்

இதுபற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும் கழக பொருளாளருமான பிரேமலதா, விழுப்புரம் தேமுதிக மாவட்டச் செயலாளரும் உயர் மட்டக்குழு உறுப்பினருமான முன்னாள் எம்.எல்.ஏ, எல்.வெங்கடேசனிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அதிமுக அணியில் கிடைத்தது நான்கே சீட்டுகள் என்பதால் அனைத்திலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் பிரேமலதா.

அந்த வகையில் கள்ளக்குறிச்சி பற்றி ஆலோசனை நடத்தியபோது, அங்கே திமுக சார்பில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணி போட்டியிடத் தயாராகி தொகுதியில் வேலை செய்யத் துவங்கிவிட்டார்கள் என்பதை பிரேமலதாவிடம் சொல்லியிருக்கிறார் வெங்கடேசன். மேலும், ‘ பொன்முடி மகனைத் தோற்கடிக்கணும்னா நீங்க நின்னா சரியா இருக்கும்’ என்று பிரேமலதாவிடம் நிர்வாகிகளின் விருப்பத்தையும் முன் வைத்திருக்கிறார் வெங்கடேசன்.

இதையடுத்து பிரேமலதாவும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகிவிட்டாராம், கள்ளக்குறிச்சி தொகுதியில் முன்னாள் அமைச்சர் மகனா, தேமுதிக தலைவர் மனைவியா என்ற பேச்சு பரவிவருகிறது�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share