கர்நாடக மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று நடைபெற்று வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.
2 மணி நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டு தொகுதிகளிலும், இதர கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
மாண்ட்யா மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட சுமலதா அம்பரீஷ் 15,340 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஊரக பெங்களூரு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷ், தெற்கு பெங்களூருவில் பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, பிஜபூரில் பாஜக வேட்பாளர் ஜிகஜினகி ரமேஷ், சிக்கபலபூரில் பாஜக வேட்பாளர் பச்சே கவுடா, தக்ஷினா கன்னடா தொகுதியில் பாஜக வேட்பாளர் நளின் குமார், ஹசான் தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதா தள வேட்பாளர் பிரஜ்வால் ரெவென்னா, ஹவேரியில் பாஜக வேட்பாளர் உதசி, கோலாரில் பாஜக வேட்பாளர் முனிசாமி, ஷிவமோகாவில் பாஜக வேட்பாளர் ராகவேந்திரா, உத்தாரா கன்னடாவில் பாஜக வேட்பாளர் அனந்த் குமார் ஹெக்டே ஆகியோர் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர்.
உத்தாரா கன்னடாவில் மத்திய அமைச்சர் அனந்த்குமார் ஹெக்டே 3.1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். குல்பார்கா தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே முதல்முறையாக பின்னடைவை சந்தித்துள்ளார்.�,