Cகமல் மீது வழக்குப் பதிவு!

public

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நேரில் சென்று கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நேற்று (மே 22) போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களை மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் இன்று காலை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய விவகாரத்தில் அம்பை நொந்து பயனில்லை. ஏவியது யார், இதற்கு (துப்பாக்கிச் சூட்டுக்கு) ஆணை பிறப்பித்தது யார் என்று நேற்றே கேட்டிருந்தேன். இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், 144 தடை உத்தரவு போட்டிருக்கும்போது, அதை மீறி தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய கமல் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

**அரசு நிர்வாகத்தின் தோல்வி**

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவேற்றியுள்ளார். அதில், “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு அரசின் அலட்சியம், உளவுத் துறை உட்பட ஒட்டுமொத்த நிர்வாகத்தின் தோல்வி. காவல் துறையின் வரம்பு மீறிய, சட்டத்துக்குப் புறம்பான, மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *