�
போதைப்பொருள் பயன்படுத்தியதாக தெலுங்கு திரை நட்சத்திரங்கள் 12 பேர் அண்மையில் சிக்கிய நிலையில், இதே விவகாரத்தில் தமிழ்த் திரையுலகினரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், கேரளா வழியே சர்வதேச நாடுகளுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாகச் சென்னை மண்டல போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நடத்தப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளில், கடந்த ஆண்டு மட்டும் 5 வெளிநாட்டினர் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கும்பல் இரவு நேரக் கேளிக்கை விடுதியான பப்புகளுக்குச் செல்லும் வசதியான குடும்பத்தினர், பணக்கார இளைஞர்கள், தமிழ் சினிமா நட்சத்திரங்களைக் குறிவைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு, கொகைன், கெட்டமைன், வேக்கைன், அல்ப்ராசோலம் உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்கப்படுகின்றன.
இந்த வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஜூலை மாதம் தெலுங்கு நடிகர்கள் ரவிதேஜா, நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான், பூரிஜெகநாத், கலை இயக்குநர் சின்னா, ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு உள்ளிட்ட 12 பேர் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
நன்றி: [ஹிமாலயன் டைம்ஸ்](https://thehimalayantimes.com/nepal/100-drug-smugglers-users-arrested-udayapur-fiscal/) மற்றும் [தி நியூஸ் பேப்பர்](http://www.tnp.sg/news/singapore/two-arrested-raid-suspected-drug-lab-yishun)
�,