cஏர்டெல்: 3 மாதங்களுக்கு 30 ஜி.பி. டேட்டா!

Published On:

| By Balaji

ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியைச் சமாளிக்கும் விதமாக ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு 30 ஜி.பி. இலவச டேட்டா வழங்கும் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

ரூ.399 திட்டத்தின் கீழ், ’4ஜி’ ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தினசரி 1 ஜி.பி. இலவச டேட்டாவைப் பெறலாம். மேலும், 70 நாட்களுக்கு 3,000 இலவச அழைப்பு நிமிடங்களும் இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள் வரையிலும் ஒரு வாரத்துக்கு அதிகபட்சமாக 1,200 நிமிடங்கள் வரையிலும் பேசிக்கொள்ளலாம்.

ரூ.345 திட்டத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தினசரி 1 ஜி.பி. இலவச டேட்டாவுக்குப் பதிலாக 2 ஜி.பி. தினசரி டேட்டா வழங்கப்படுகிறது. அழைப்பு வசதியைப் பொறுத்தவரையில், ரூ.399 திட்டத்தில் வழங்கப்பட்ட அதே சலுகை இத்திட்டத்துக்கும் வழங்கப்படுகிறது.

ரூ.244 திட்டத்தில் தினசரி 1 ஜி.பி. அளவிலான 4ஜி டேட்டா வீதம் 70 நாட்களுக்கு இலவச டேட்டா வழங்கப்படுகிறது. இதில் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 300 இலவச ஏர்டெல் – ஏர்டெல் அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். அதேபோல ஒரு வாரத்துக்கு 1200 ஏர்டெல்- ஏர்டெல் அழைப்புகள் மட்டுமே மேற்கொள்ள முடியும். ரூ.399 திட்டத்தில் ஏர்டெல் நெட்வொர்க்கிலிருந்து வேறு எந்த நெட்வொர்க்குக்கும் இலவச அழைப்புகள் மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

’மை ஏர்டெல் ஆப்’ மூலம் பதிவு செய்பவர்களுக்கு இச்சலுகைகள் வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ தரும் கடும் போட்டியைச் சமாளிக்க மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் தொடர்ந்து இதுபோன்ற சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel