cஎன்டிடிவி புரோமோட்டர்களுக்குத் தடை!

Published On:

| By Balaji

என்டிடிவி புரோமோட்டர்களான பிரனாய் மற்றும் ராதிகா ராய் இரண்டு ஆண்டுகள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூடெல்லி டெலிவிஷன் லிமிடெட் (என்டிடிவி) பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமாகும். இந்நிறுவனத்தைத் தொடங்கிய பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் பங்கு பரிவர்த்தனை சந்தையில் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்டிடிவி நிறுவனத்தின் பங்குதாரர் ஒருவர் பிரனாய் மற்றும் ராதிகா ராய் மீது சுமத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி விசாரணையில் ஈடுபட்டது.

விஸ்வபிரதான் கமெர்சியல் என்ற நிறுவனத்துடனான கடன் ஒப்பந்தம் ஒன்றில் என்டிடிவி புரோமோட்டர்களும் ஆர்.ஆர்.பி.ஆர். ஹோல்டிங் நிறுவனமும் முறையான விவரங்களை வெளியிடவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஐசிஐசிஐ வங்கியும் சம்பந்தப்பட்டுள்ளது. 2008 அக்டோபர் 14ஆம் தேதி முதல் 2017 நவம்பர் 22 வரையிலான காலத்தில் பங்குப் பரிவர்த்தனை தொடர்பான ஆய்வை செபி மேற்கொண்டது. இதில் மோசடி நடைபெற்றது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பிரனாய் மற்றும் ராதிகா ராய் ஆகிய இருவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவி நிறுவனத்தில் பிரனாய் ராய் 15.94 சதவிகிதப் பங்குகளையும், அவரது மனைவியான ராதிகா ராய் 16.33 சதவிகிதப் பங்குகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

மேலும் படிக்க

**

**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/15/43)**

**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/17)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/13/22)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/06/14/51)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share