அஜித் நடிக்கும் நேர்கொண்ட பார்வை படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
விஸ்வாசம் படத்தின் மூலம் இந்த ஆண்டை வெற்றியுடன் தொடங்கிய அஜித் அடுத்த ஐந்து மாதங்களில் மற்றொரு படத்தை முடிவு செய்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுவந்த நிலையில் மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தை வெளியிட முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தின் பணிகள் நிறைவடையாததால் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு மாற்றினர்.
படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் வட பழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றுவருகிறது. அஜித் வழக்கம்போல இரவு நேரங்களில் டப்பிங் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியில் அமிதாப் பச்சன் ஏற்று நடித்த வேடத்தில் அஜித் நடித்திருந்தாலும் தமிழுக்கு ஏற்ப சில காட்சிகள் மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். தமிழில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். அத்துடன் முதன்முறையாக ரீமேக் படத்தில் அவர் நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் சற்று முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா டைரங் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”