தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் புதிய படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இளம் இயக்குநர்களின் படங்களில் நடிக்க தொடர்ந்து விருப்பம் காட்டிவருபவர் தனுஷ். அவரது ஹிட் படங்களின் பட்டியலில் பெரும்பான்மையானவை இளம் இயக்குநர்கள் உருவாக்கியவை. அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்ற செய்தி வெளியாகியிருந்தது. தற்போது இரண்டு வருடங்களுக்குப் பின் இப்படத்தின் அறிவிப்பை ஒய் நாட் ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.
கேங்க்ஸ்டர் த்ரில்லர் வகையைச் சேர்ந்த இப்படத்தின் மூலம் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முழுக்க இங்கிலாந்தை மையமாகக் கொண்டே இப்படம் உருவாகவுள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக வினோத் ராஜ்குமார் பணியாற்றுகிறார். படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொண்டுள்ளார், அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் ஒய்நாட் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”