வெளிநாட்டிலிருந்து அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்களில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையில் அமெரிக்காவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் உலக நாட்டவர்கள் குறித்த கண்ணோட்டத்தை அமெரிக்க வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2017லிருந்து 2023ஆம் ஆண்டு வரையில் இந்தியாவிலிருந்து சுற்றுலாப் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகமாக 46 சதவிகித வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல வருடாந்திர வளர்ச்சியிலும் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் வருகை விகிதம் 6.5 சதவிகிதமாக இருக்கிறது.
2009ஆம் ஆண்டில் சர்வதேசப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சமயத்தில்தான் அமெரிக்காவுக்கான இந்தியச் சுற்றுலாப் பணிகளின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டிருந்தது. அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டிலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில் சர்வதேசப் பயணங்களுக்கான விமானக் கட்டணங்கள் மலிவாக இருப்பதால் வெளிநாடுகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த வளர்ச்சி அதீதமாக இருப்பதாகவும் பயணச் சேவைத் தளமான யாத்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டுப் பயணங்களுக்கான முன்பதிவுகள் 30 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறுகிறது.�,