cஅதிகரிக்கும் விவசாயிகளின் கடன்சுமை!

Published On:

| By Balaji

ஒருவர் வாங்கிய கடனைத் திருப்பித்தர இயலாத நிலையில்தான் அதனைத் தள்ளுபடி செய்யுமாறு வேண்டுகிறார். அந்த இயலாமையை அங்கீகரிப்பதும், புரிந்துகொள்வதும் குறைந்தபட்ச மனிதநேயத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். இந்தியாவில் கடனில் தத்தளிக்கும் விவசாயக் குடும்பங்களின் பங்கு, 1992இல் 25 விழுக்காடாக இருந்தது; அது 2016இல் 52 விழுக்காடாக, இருமடங்கு அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் அவர்களின் பங்கு 89 முதல் 93 விழுக்காடாக இருக்கிறது.

அந்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் கடன்சுமை சராசரியாக ரூ. 47,000. இந்த தொகை, ஓராண்டில் விவசாயத்திலிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் வருவாயை மிஞ்சுகிறது. கிட்டத்தட்ட 68 விழுக்காடு விவசாயக் குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளுக்கான செலவு, அவர்களின் வரவை விட அதிகமாக இருக்கும்போது, விவசாயிகளால் எப்படி கடனைத் திருப்பித்தர முடியும்?

கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்த்து விவசாயிகள் வேண்டுமென்றே கடனைத் திருப்பித் தராமல் இருக்கிறார்கள் எனும் தவறான புரிதலை நாம் திருத்திக்கொள்ள வேண்டும். பயிர்கள் பொய்த்துப்போவது, சந்தையில் வேளாண் பொருட்களுக்குக் கிடைக்கும் அடிமாட்டு விலை, தொடர்ந்து அதிகரித்து வரும் இடுபொருள்களின் விலை, நீராதாரங்கள் வற்றிப்போவது, வெள்ளம் வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஆகிய காரணிகள் அனைத்தும் விவசாயிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. அப்படி இருக்கும்போது, அவர்களின் கடன்சுமை அதிகரித்திருப்பதற்கு அவர்களே காரணம் என்று கூறுவது நியாயமாகாது. வியாபாரிகள், நுகர்வோர் நலனை மட்டுமே மையப்படுத்தும் வேளாண் பொருளாதாரக் கொள்கையால், வேளாண் பொருட்களின் வர்த்தகத்தில் விவசாயிகளின் குரலும் வருவாயும் நலிவடைந்துள்ளன.

இதுவும் கடன்சுமை பெருகியதற்கு முக்கியக் காரணம்.

அவ்வப்போது வெவ்வேறு துறைகளுக்கு நடுவணரசு பல்வேறு சலுகைகள், வரி விதிப்பிலிருந்து விலக்கு, கடன் தள்ளுபடி என அத்துறைகளின் நிதிச்சுமையைக் குறைக்க உதவியுள்ளது. பூதாகரமாக உருவெடுத்துள்ள வங்கிகளின் வராக்கடன் பிரச்சனைக்கு முக்கியக் காரணமான பெருநிறுவனங்களின் கடனை ரத்து செய்வதும், அதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய வங்கிகளுக்கு ‘மறுமூலதனமாக்கம்’ (recapitalization) திட்டத்தை அமல்படுத்துவதும், ஒவ்வொரு வரவு-செலவு அறிக்கையிலும் அந்நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வருமான வரி, கலால் மற்றும் சுங்க வரிகளைக் கட்டுவதில் இருந்து விலக்கு அளிப்பதும் (revenue forgone) வாடிக்கையாகிப் போய்விட்டது.

இராணுவத்தில் சேவை செய்தவர்களுக்கு ‘ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்’ திட்டமும், அரசு ஊழியர்களுக்கு சம்பள நிர்ணயக் குழுவின் பரிந்துரையால் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வும் இருக்கும்போது, விவசாயிகளின் வருமானம் தொடர்ந்து உயர்வதற்கு மட்டும் நாம் இன்னும் ஏன் வழி செய்யவில்லை?

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share