பட்டாசு கடையில் தீ விபத்து: 2 சிறுவர் உள்பட மூவர் பலி!

Published On:

| By Balaji

u

வேலூர் மாவட்டத்தில் இன்று மதியம் பட்டாசு கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி, லத்தேரி பேருந்து நிலையத்தில் மோகன் (60) என்பவருக்கு சொந்தமாக பட்டாசுக்கடை ஒன்று உள்ளது. இன்று(ஏப்ரல் 18) வழக்கம் போல வியாபாரம் நடந்து கொண்டிருந்த வேளையில், திடீரென மதியம் கடையில் தீ விபத்து ஏற்பட்டு, தீ பற்றி எரிந்தது. இதில் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

கடையின் உள்ளே இருந்த மோகன் மற்றும் அவரது 2 பேரக்குழந்தைகளான தனுஷ் (7) தேஜாஸ் (6) ஆகிய மூவரும் தப்பித்து செல்ல வழியில்லாமல், தீயில் கருகி உயிரிழந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து நடந்த இடத்தை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், எஸ்.பி செல்வகுமார், குடியாத்தம் ஆர்டிஓ மன்சூத் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் தீ விபத்து நடப்பது தொடர்கதையாக இருக்கும் வேளையில், பட்டாசு விற்பனை நிலையத்திலும் விபத்து நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share