சம்பளம், 4ஜி: பிஎஸ்என்எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்!

public

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகை, இந்திய ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும் நிலையில்… தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் இன்று (பிப்ரவரி 24) உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சரிவை நிமிர்த்துவதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு 69 ஆயிரம் கோடி ரூபாயை அறிவித்தது. அந்த நிதி இன்னும் வழங்கப்படாததை எதிர்த்தும், தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.

அக்டோபர் 2019 இல், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு ரூ .68,751 கோடி ரூபாயை மறுமலர்ச்சி நிதியாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அரசு நடத்தும் நிறுவனங்களுக்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதிய திட்டம் உள்ளிட்டவைக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால் அண்மையில் 78 ஆயிரத்து 569 பிஎஸ்என்எல் ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பி.எஸ்.என்.எல் சொத்துக்களை பணமாக்குவதற்கான செயல்முறையும் நத்தை வேகத்தில் நகர்கிறது. ஏ.ஜி.ஆரின் கணக்கீடு தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொலைத் தொடர்புத் துறையில் நிச்சயமற்ற நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வங்கிகளும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதிக அளவு கடன்கள் அளிக்க முன் வரவில்லை. நிதி கிடைக்காத காரணத்தினாலும், பிஎஸ்என்எல்லின் 4 ஜி சேவை 2020 இறுதிக்குள் தொடங்கப்பட வாய்ப்பில்லை” என்கிறார்கள் பிஎஸ் என் எல் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர்.

“மேலும் டிசம்பர் மாத சம்பளமே இதுவரை வழங்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி முடிய இருக்கும் நிலையில் இன்னும் ஜனவரி மாத சம்பளமே வழங்கப்படவில்லை. உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பிடித்தம் செய்யப்பட்ட நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் 4ஜி சேவையினை உடனடியாக தொடங்கக் கோரியும், பிஎஸ் என் எல் லுக்கு கடன் திரட்டுவதற்கான அரசு உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் இன்று போராடுகிறோம் “ என்கிறார்கள் மதுரை தல்லாக்குளத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் மதுரை மாவட்ட அனைத்து பிஎஸ்என்எல் தொழிற்சங்கக் கூட்டமைப்பினர்.

ஏற்கனவே பிப்ரவரி 11 அன்று நாடு தழுவிய மதிய உணவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று பிப்ரவரி 24 ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.