கிச்சன் கீர்த்தனா: கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு

public

ளிதாகக் கிடைக்கும் பாரம்பர்ய பொருட்களை வைத்து, சுலபமாக சமைத்துவிடக்கூடிய இந்த கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு, உங்கள் சுவை அரும்புகளை நிச்சயம் மலரச் செய்யும். இது சிறந்த மதிய உணவாகும். பள்ளிக்குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸுக்கு ஏற்றது.
**என்ன தேவை?**
பிஞ்சு கத்திரிக்காய் – கால் கிலோ
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 10 பற்கள்
தக்காளி – 2
புளிக்கரைசல் – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
தனியாத்தூள் (மல்லித்தூள்), மிளகாய்த்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
சாதம் – ஒரு கப்
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
நெய் – ஒரு டீஸ்பூன்
**வறுத்து அரைக்க… **
எண்ணெய் – தேவையான அளவு
உளுந்து – கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு, சீரகம் – தலா கால் டீஸ்பூன்
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி அளவு
**தாளிக்க… **
கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயம், வெந்தயம் – தலா கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, இதில் வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கி பாதி வெந்தும் அதில் நான்காக வகுந்த கத்திரிக்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்) சேர்த்துக் கிளறி பின்பு உப்பு, புளிக்கரைசல்விட்டு தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் ஏழு நிமிடங்கள்விட்டு, அடுப்பை அணைக்கவும். இதில் வேகவைத்த சாதம் சேர்த்து அதன்மீது வறுத்துபொடித்த பொடியைத் துாவி ஒரு டீஸ்பூன் நெய்விட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால், மணம் வீசும் கத்திரிக்காய் கூட்டாஞ்சோறு தயார்.

**[நேற்றைய ரெசிப்பி – நாட்டு அவரைக்காய் பொரித்தக் கூட்டு!](https://www.minnambalam.com/public/2022/06/08/1/avarakai-kootu)**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.