tபிரெக்ஸிட்: உலகே உற்றுநோக்கும் விவாகரத்து!

public

பொதுவாகவே மேலைநாடுகளில் விவாகரத்து என்பது இயல்பான ஒரு விஷயம். பச்சை சிக்னல் விழுந்து சிகப்பு சிக்னல் விழுவதைப் போல மேலைநாடுகளில் திருமணமும் பிரிவும் இயல்பாகவே எவ்வித அவதானக் குவிப்பும் இன்றி நடக்கும்.

ஆனால், இந்த வெள்ளிக்கிழமை இரவை பல மேலை நாடுகள் கனத்த இதயத்தோடும், ஒரு வித உணர்வற்ற உணர்வோடும் உறைந்து உருகுகின்றன. காரணம் ஐரோப்பிய யூனியன் என்ற ஒன்றுபட்ட அமைப்பில் இருந்து பிரிட்டன் இன்று விவகாரத்து பெற்று முறைப்படி விலகுகிறது. ஜிஎம்டி நேரப்படி இன்று இரவு 11 மணி அதாவது நமது இந்திய நேரப்படி நாளை காலை அதிகாலை 4.30 க்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எல்லா சடங்குகளும் முடிந்து பிரிட்டன் வெளியேறுகிறது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் ஒரு அங்கத்தினர் அல்ல.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் எக்சிட் ஆகிறது அதாவது வெளியேறுகிறது என்பதையே பிரெக்ஸிட் என்ற வார்த்தையால் சுருக்கமாக அழைக்கிறார்கள். பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் இதை இங்கிலாந்தில் கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கிலாந்தில் பிரெக்ஸிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்த 48% பேர் இந்தப் பிரிவை நினைத்து வருந்திக் கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய ஐரோப்பிய இரவில் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய கட்டிடங்களிலிருந்து இங்கிலாந்தின் யூனியன் ஜாக் கொடிகள் இறக்கப்படும். “யாரும் கவனிக்காமல் ஐரோப்பிய ஒன்றியம் இந்த இரவைக் கடக்க விரும்புகிறது. ஆனாலும் உலகமே கவனிக்க ஆரம்பித்துவிட்டது” என்கிறார்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் பிரிட்டன் தவிர்த்த மற்ற நாட்டு எம்.பிக்கள். ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இந்த வாரம் பிரிவின் வேதனை வாரம் என்கிறார்.

பிரெக்ஸிட்டை முன்னிறுத்தி இங்கிலாந்தில் வெற்றிபெற்று பிரதமராகி தனிக்குடித்தனம் செல்லும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், எல்லோருடைய உணர்வுகளையும் கவனத்தில் கொள்ளும் ஒரு கண்ணியமான வெளியேற்றமாக இது இருக்கும்” என்று உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் இங்கிலாந்துக்கு 73 எம்.பி.க்கள் இருக்கிறார்கள். இனி அவர்கள் பதவியிழப்பார்கள்.

**இன்றிரவு என்னதான் நடக்கும்?**

இங்கிலாந்து முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது என்பதை பிரதமர் போரிஸ் ஜான்சன் முறைப்படி அறிவித்து நாட்டுக்கு உரையாற்றுகிறார். பிரெக்ஸிட் என்பது இங்கிலாந்தின் 100 சதவிகித ஏகோபித்த ஒருமனதான முடிவல்ல. எனவே பிரெக்ஸிட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல கூட்டங்களும் நடக்கின்றன. அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களிலிருந்தும் யூனியன் கொடி அகற்றப்படும். அவற்றில் ஒன்று பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கோட்பாட்டில் மாற்றங்கள் அதிகம் இருக்குமே தவிர மக்களை பாதிக்கும் பெரிய மாற்றங்கள் மிகக் குறைவு. வணிக நிறுவனங்கள் இயல்பாக செயல்பட முடியும்.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.