Dரிலாக்ஸ் டைம்: பிரெட் வடை!

Published On:

| By Balaji

வெளியில் சென்று எதையும் வாங்கி வர முடியாத சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பிரெட்டை வைத்து இந்த வடை செய்து சாப்பிட்டு உடனடி புத்துணர்ச்சி பெறலாம்.

**எப்படிச் செய்வது?**

நான்கு பிரெட் ஸ்லைஸை சிறிய துண்டுகளாகப் பிய்த்துக்கொள்ளவும். இதனுடன் கால் கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், கால் கப் பொடியாக நறுக்கிய கேரட், கால் கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், சிறிதளவு கொத்தமல்லித்தழை, ஒரு டீஸ்பூன் தோல் சீவி துருவிய இஞ்சி, தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் தெளித்து, கூடவே மூன்று டேபிள்ஸ்பூன் அரிசி மாவு அல்லது சோள மாவு (கார்ன்ப்ளார்) சேர்த்து, கெட்டியான வடை மாவுப் பதத்துக்குக் கலந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி அதில் கலந்து வைத்த மாவை வடை போலத் தட்டிப்போட்டுப் பொரித்தெடுக்கவும்.

**சிறப்பு**

குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. உடனடியாக பசியைப் போக்கும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share