இந்த கொரோனா காலத்தில் வெளியே எங்கும் செல்ல முடியாமல், இருக்கிற இடத்திலேயே வேலை செய்கிறவர்களின் மிகப் பெரிய பிரச்சினையே உணவுதான். அப்படிப்பட்டவர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சமையல் ஒன்றும் அவ்வளவு கஷ்டமான வேலை இல்லை. அதற்கு உதாரணம், எளிமையாகச் செய்யக்கூடிய இந்த பிரெட் பனீர் ரோல். ரிலாக்ஸ் டைமில் செய்து சாப்பிட சுவையான ஸ்நாக்ஸ் இது.
**எப்படிச் செய்வது?**
100 கிராம் பனீர், சின்னதாக ஒரு சதுர வில்லை சீஸ், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று, கொத்தமல்லித்தழை சிறிதளவு ஆகியவற்றைக் கலந்துகொள்ளவும். ஒரு பிரெட்டில் வெண்ணெய் தடவி, பனீர் கலவையை வைத்து, இன்னொரு பிரெட்டால் மூடி, தோசை தவாவில் போட்டு, நன்கு டோஸ்ட் செய்து எடுக்கவும். ரோல் செய்து சாப்பிடவும்.
**சிறப்பு**
இதில் கொழுப்பு, புரதம், கால்சியம் போன்றவை உள்ளன. உடனடி சக்தி கிடைக்கும். எடை அதிகரிக்கும். புத்துணர்ச்சி தரும்.�,