இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின் பிரபலமான உணவு மால்புவா. வழக்கமாக மைதா மாவில் செய்யப்படும் வட இந்தியர்களின் விருப்ப உணவான இதை பிரெட்டிலும் செய்து ருசிக்கலாம். ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்ற உணவாகவும் அமையும்.
**எப்படிச் செய்வது?**
ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை, கால் கப் தண்ணீர் சேர்த்துக் கலந்து ஒரு சிறு கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும். இதில் கால் டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்துகொள்ளவும். நான்கு பிரெட் துண்டுகளை வட்டமான மூடிவைத்து வெட்டிக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி வெட்டிவைத்த பிரெட் துண்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்துக்கொள்ளவும். பொரித்த பிரெட் துண்டுகளை மிதமான சூட்டில் இருக்கும் சர்க்கரைப் பாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்தால் பிரெட் மால்புவா ரெடி.
**சிறப்பு**
உடனடி புத்துணர்ச்சி தரும் இது, அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.�,