கிச்சன் கீர்த்தனா: பிரெட் கட்லெட்

public

சமைக்க நேரமின்றி ஓடுபவர்கள், உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டிருப்பவர்கள் எனப் பலருக்கும் பிரெட் எளிதான உணவு. இந்த பிரெட்டில் வெரைட்டியான உணவுகளையும் செய்யலாம். அதற்கு இந்த பிரெட் கட்லெட் சிறந்த உதாரணம்.

**என்ன தேவை?**

பிரெட் ஸ்லைஸ் – 6 (ஓரங்களை நீக்கவும்)

வெங்காயம் – ஒன்று (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து மசிக்கவும்)

குடமிளகாய் – ஒன்று (நறுக்கியது)

மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – அரை டீஸ்பூன்

சோம்புத்தூள் – அரை டீஸ்பூன்

பிரெட் தூள், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?:**

வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு சூடாக்கி அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும். இதனுடன் தேவையான உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும். பிறகு இதில் நறுக்கிய குடமிளகாய் சேர்த்து வதக்கவும். குடமிளகாய் நன்கு வதங்கியவுடன் மசித்த உருளைக்கிழங்கையும் அதில் சேர்த்துக் கிளறி எடுக்கவும். இந்த மசாலா கலவையை சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும்.

பிரெட் ஸ்லைஸைத் தண்ணீரில் நனைத்து, பிழிந்து எடுக்கவும். பின்னர் ஒரு மசாலா உருண்டையை இதன் நடுவில் வைத்து சிறிய பந்தாக உருட்டிக்கொள்ளவும். மீதமுள்ள எல்லா பிரெட் ஸ்லைஸின் நடுவிலும் மேற்சொன்னதுபோல மசாலா உருண்டைகளை வைத்து தயார் செய்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி உருட்டிவைத்திருக்கும் பிரெட் பந்துகளை பிரெட் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் சுவையான பிரெட் கட்லெட் தயார்.

**[நேற்றைய ரெசிப்பி: பீட்ரூட் குச்சி சிப்ஸ்!](https://www.minnambalam.com/public/2021/07/08/1/beet-root-kuchi-chips)**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.