nகிச்சன் கீர்த்தனா: போன்லெஸ் மட்டன் மசாலா

Published On:

| By Balaji

அசைவ உணவுகளில் மட்டன் ரெசிப்பிகள் கூடுதல் ருசிதான். அதுவும் சாப்பிட இதமாக, பதமாக இருந்தால் கேட்கவே வேண்டாம். அதற்கு இந்த போன்லெஸ் மட்டன் மசாலா சரியான சாய்ஸ். பிரியாணி, தோசை, ஆப்பம், சாதம், இட்லியுடன் சாப்பிட அனைவருக்கும் ஏற்றது.

**என்ன தேவை?**

மட்டன் – 250 கிராம்

சின்னவெங்காயம் – 10

பச்சை மிளகாய் – ஒன்று

தக்காளி – ஒன்று

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் – முக்கால் டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – கால் கப்

**எப்படிச் செய்வது?**

மட்டனை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். கொழுப்பு உள்ள பீஸ் என்றால் சுவையாக இருக்கும்.

குக்கரில் மட்டன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு 20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்னவெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி வேகும்வரை வதக்கவும்.

நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், சேர்த்து வதக்கவும். பச்சை வாடை நீங்கியதும் வேகவைத்த மட்டன் துண்டுகள் மற்றும் மட்டன் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறவும். தண்ணீர் வற்றும்வரை வேகவைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பரிமாறவும்.

**[நேற்றைய ஸ்பெஷல்: கிராமத்து கொத்துக்கறி குழம்பு](https://minnambalam.com/public/2021/02/25/1/village-mutton-chops-kulambu)**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share