தலைக்கவசம்: போக்குவரத்து ஊழியர்களுக்கு அறிவுரை!

Published On:

| By Balaji

இருசக்கர வாகனங்களில் செல்லும் போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர் போக்குவரத்துக்கழகம், அனைத்து கிளை மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் மாநகர போக்குவரத்து கழக அனைத்து பிரிவு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். இதுகுறித்து போக்குவரத்து கழக தலைமையகம், பணிமனைகளில் விளம்பர பலகை வைக்க வேண்டும் என அரசு கூடுதல் செயலாளர் அண்மையில் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில், அனைத்து போக்குவரத்து கழக பணிமனைகள் மற்றும் தொழில்கூட வளாகங்களில் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பார்க்கிங் வசதி கிடையாது என்று விளம்பர பலகை வைக்க வேண்டும். தலைக்கவசம் இல்லாத பணியாளர்களின் வாகனத்தை நிறுத்த அனுமதிக்கக் கூடாது என சம்பந்தப்பட்ட காவலாளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share