வரலாறு காணாத வெள்ளத்தால் பீகார் மாநிலமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு சாட்சியாக வெள்ள மீட்புப் பணிகளை பார்வையிடச் சென்ற முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான ராம் கிருபால் யாதவ் படகில் இருந்து தவறி வெள்ளத்துக்குள் விழுந்த வீடியோ பரவி வருகிறது.
வெள்ள சேதங்களைப் பார்வையிட்டு மீட்புப் பணிகளை முடுக்கிவிடுவதற்காக ராம் கிருபால் யாதவ் பாட்னா மாவட்டத்திலுள்ள மாஷுரி பகுதியில் ஒரு படகில் சென்று கொண்டிருந்தார். அப்போது வெள்ளத்தில் சிக்கியிருந்தவர்களுக்கு உதவி செய்ய முற்படுகையில் திடீரென படகிலிருந்து கீழே விழுந்தார் ராம் கிருபால். இதனால் அதிர்ந்துபோன பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரைக் காப்பாற்றி படகுக்குள் ஏற்றினர்.
நனைந்தபடியே பேட்டியளித்த ராம் கிருபால் யாதவ், “நிதீஷ்குமார் அரசு பாட்னா நகரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து கவனித்து வருகிறது. ஆனால் பாட்னா புறநகர், கிராமப் பகுதிகளில் வெள்ளம் கடுமையாக பாதித்திருக்கிறது. அதுபற்றி நிதீஷ் குமார் அரசு கவலைப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
Patna: Travelling in jugaad boat, minister falls in river
BJP MP and former Union minister Ram Kripal Yadav on Wednesday night fell into a river near Patna while he was on his way to a flood-hit area falling in his parliamentary constituency. Due to non-availability of boats, Yadav was riding a contraption made with the help of tyre tubes tied to bamboo shafts, to cross the Dardha river along with some of his supporters.
�,”