Wதிமுகவை நோக்கி பிரசாந்த் கிஷோர்

public

தேர்தல் என்றால் கட்சியின் முக்கியஸ்தர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளை கூட்டி ஆலோசனை செய்து- வியூகங்கள் வகுத்து மக்களை நோக்கிப் புறப்படுவது ஜனநாயகத்தில் பழைய ஃபேஷனாகிவிட்டது.

இப்போது ஒரு கார்ப்பரேட் கம்பெனியை தேர்தல் உத்தி ஆலோசகர் என்ற பெயரில் நியமித்து, அவர்களுக்கு கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு, தேர்தலை ஒரு மெகா வியாபாரமாகப் பார்ப்பதே இப்போதைய ஃபேஷன்.

2012 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு மோடிக்கு ஆலோசகராக செயல்பட்ட பிரசாந்த் கிஷோர், அதன் பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தார். அதன் பின் பீகாரில் நித்தீஷ், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி என்று தேர்தல் உத்தி வகுப்பாளராக செயல்பட்டு அவர்களின் வெற்றியை முடுக்கிவிட்ட பிரசாந்த் கிஷோர் தற்போது மேற்கு வங்காள முதல்வரான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரசுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.

தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் பிரசாந்த் கிஷோரோடு பேசிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பிரசாந்த் கிஷோர் திமுகவை நோக்கி வந்துகொண்டிருப்பதாக அறிவாலய வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலினுடைய உத்தி வகுப்பாளராக கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக செயல்பட்டுக் கொண்டிருந்த சுனில் தற்போது அப்பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இந்த நிலையில்தான் பிரசாந்த் கிஷோர் -திமுக இடையே புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிடிக்கல் ஆக்‌ஷன் கமிட்டி என்ற அமைப்பு இந்திய தேர்தல் அரசியலில் உத்திவகுக்கும் பொறிமுறைகளில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலுக்கும் மாறும் தேசிய, பிராந்திய கள நிலவரங்கள், அதற்கேற்ப கைக்கொள்ள வேண்டிய உத்திகள், அணுகுமுறைகளை அரசியல் கட்சிகளின் தலைமைகளுக்குச் சொல்லிக் கொடுத்து அதற்கு பதிலாக கோடிகளைப் பெறுவதுதான் பிரசாந்த் கிஷோரின் பிசினஸ்.

“அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கடந்த முறை டெல்லி சென்றிருந்தபோது அவரை பிரசாந்த் கிஷோர் சந்தித்ததாக தகவல்கள் பரவின. இதற்கு ஏற்பாடு செய்தவர் சேலத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் எம்.பி. ரபி பெர்னார்ட் என்றும் தகவல்கள் வந்தன. ஆனால் ரபி இதை உறுதிப்படுத்தவில்லை.

பிறகு பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தோடு ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும், அதன்படியே கட்சி அமைப்புகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் மநீமவிலேயே கூறினார்கள். ஆனால் இதுவும் வெளிப்படையான சந்திப்பாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த சூழலில் இப்போது பிரசாந்த் கிஷோர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவுடன் கை கோர்க்க இருக்கிறார். அதிமுக, மநீம இரண்டு கட்சிகளோடும் பிரசாந்த் கிஷோருக்கு பட்ஜெட் ரீதியான பிரச்சினைகள் இருந்தன. ஆளுங்கட்சியான அதிமுகவோடே பட்ஜெட் பிரச்சினை என்றால் திமுக என்ன பிரசாந்துக்கு அள்ளியா கொடுத்துவிடப் போகிறது என்ற கேள்வி எழலாம்.

ஆனால் தேர்தலை ஒட்டி பிரசாந்த் கிஷோர் தமிழகத்தில் நடத்திய கள ஆய்வில் திமுகவுக்கு சாதகமான நிலை நிலவுவதாக அறிந்துள்ளார். இதை ஒட்டியே அவர் திமுக என்ற, முன்னால் ஓடும் குதிரை மீது ஏற தயாராகியிருக்கிறார். டெல்லியில் வைத்து பேசி முடிக்கப்பட்டுவிட்டது. பிரசாந்த் கிஷோர் வருகிறார் என்ற காரணத்தாலேயே இதுவரை ஸ்டாலினுடைய உத்தி வகுப்பாளராக இருந்த சுனில் தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறார்” என்கிறார்கள் டெல்லி கன்சல்டன்ட் வட்டாரங்களில்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *