`ரிலாக்ஸ் டைம்: பீட்ரூட் பனீர் சாலட்!

Published On:

| By Balaji

‘சமைக்க வேண்டாம்… அப்படியே சாப்பிடலாம்’ வகை உணவுகளில் பனீருக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த பனீருடன் சத்துகள் நிறைந்த பீட்ரூட் சேர்த்து ரிலாக்ஸ் டைமில் இந்த பீட்ரூட் பனீர் சாலட் சாப்பிடுங்கள். உடனடி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

**எப்படிச் செய்வது?**

200 கிராம் பீட்ரூட்டைத் தோல் நீக்கி வட்டமாக வெட்டி நீராவியில் ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். 100 கிராம் பனீரை அதே அளவுக்கு மிக மெல்லியதாக வெட்டி வேகவைத்த பீட்ரூட் மேல் அடுக்கவும். தலா 50 கிராம் கேரட், கோஸ் போன்றவற்றைச் சீவி அவற்றுடன் தேவையான அளவு கெட்டி தயிர், தேன் சேர்த்துக் கலக்கி சாலட் மீது வைக்கவும்.

**சிறப்பு**

பீட்ரூட், பனீரில் வைட்டமின் சி, இரும்பு, கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைவாக உள்ளன. டயட்டில் உள்ளவர்களுக்கு இந்த சாலட் வரப்பிரசாதமாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share