Xஜனவரி 8: வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!

Published On:

| By Balaji

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க கூடாது, பிற வங்கிகளோடு இணைக்க கூடாது. வாராக்கடன்களை வசூலிக்க வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி 8ஆம் தேதி அகில இந்திய அளவில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு என 5 வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து இப்போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச். வெங்கடாசலம் வெளியிட்ட அறிவிப்பில், வங்கி ஊழியர்களின் நலனுக்கு எதிராக ஊழியர்கள் விதிகளில் திருத்தம் செய்யக் கூடாது, பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது. கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள் (ஆர்ஆர்பி), இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் மற்றும் பொது காப்பீட்டுத் துறை ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share