ரிலாக்ஸ் டைம்: பேபி கார்ன் மசாலா பக்கோடா!

Published On:

| By Balaji

z

வழக்கமான உணவுகளைச் செய்து பரிமாறும்போது, என்னதான் சுவையாகவும் மொறுமொறுப்பாகவும் இருந்தாலும் சற்று அலுப்புத் தட்டுவது சகஜம்தான். அதிலிருந்து கொஞ்சம் மாறி வித்தியாசமான சுவையில் ரிலாக்ஸ் டைமுக்கு ஏற்ற உணவைச் செய்து சாப்பிடலாம். அதற்கு இந்த பேபி கார்ன் மசாலா பக்கோடா பெஸ்ட் சாய்ஸ்.

**எப்படிச் செய்வது?**

வட்டமாக நறுக்கிய பேபி கார்ன் இரண்டு கப், பச்சை வேர்க்கடலை அரை கப், வேகவைத்து, உதிர்த்த சோள முத்துகள் கால் கப், கடலை மாவு ஒரு கப், அரிசி மாவு அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப், பச்சை மிளகாய் விழுது ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன், இஞ்சித் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், அலசி ஆய்ந்த கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சிறிதளவு… இவை அனைத்தையும் வாய் அகன்ற ஒரு பவுலில் போட்டு தண்ணீர் தெளித்துப் பிசைந்துகொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, மாவை உதிரி உதிரியாகப் போட்டு பக்கோடாக்களாகப் பொரித்தெடுக்கவும்.

**சிறப்பு**

பேபி கார்னில் வைட்டமின் பி அதிகம். நினைவாற்றலை அதிகரிக்கும். ரத்தச் சோகையில் இருந்து பாதுகாக்கும். அனைவருக்கும் ஏற்றது. உடனடி புத்துணர்ச்சி தரும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share