அடிப்படை வசதியும் அங்கீகாரமும் இன்றிச் செயல்பட்டுவரும் 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் செயல்படும் தனியார் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரமணி என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், இப்பகுதிகளில் உள்ள தனியார்ப் பள்ளிகளில், கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடப்பதில்லை. போதுமான ஆசிரியர்கள் இல்லை. கட்டட வசதி, கழிப்பறை வசதிகள் இல்லாமல் செயல்பட்டுவருகிறது. இது குறித்து மே 24ஆம் தேதி தமிழக அரசிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அங்கீகாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று (ஜூன் 7), நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 30 தனியார் பள்ளிகள் உட்பட தமிழகம் முழுவதும் அங்கீகாரம், அடிப்படை வசதிகள் இல்லாத 903 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை தொடங்கியுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் விளக்கத்தைக் கேட்ட நீதிபதிகள் அரசு சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகக் கூறி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தனர்.
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
**
[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)
**
**
[12ஆம் வகுப்புப் பாடத்தில் இடம்பெற்ற சிவாஜி](https://minnambalam.com/k/2019/06/07/16)
**
**
[மகனுக்காக பன்னீரின் பதவிப் பிச்சை: அதிமுக பதில்!](https://minnambalam.com/k/2019/06/07/53)
**
�,”