கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்து மீதான வழக்குகளை வரும் பிப்ரவரி 16ஆம் வரை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அண்மையில் ராஜபாளையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்து தெரிவித்ததாகக் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராகக் கண்டனக் குரல்கள் எழுந்தன. இயக்குநர் பாரதிராஜா, சீமான், மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட பலரும் வைரமுத்துவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தனர். ராஜபாளையம், சென்னை உட்பட பல இடங்களில் வைரமுத்துவுக்கு எதிராகக் காவல் நிலையத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி வைரமுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். இந்த வழக்கு நீதிபதி ரமேஷ் முன்பு இன்று (ஜனவரி 1) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆண்டாள் குறித்து வைரமுத்து தன்னுடைய சொந்தக் கருத்தைக் கூறவில்லை; வெளிநாட்டு ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டித்தானே பேசினார்? பின்னர் எதற்காக இதை அரசியல் ஆக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். பின்னர் இந்த மனு மீதான விசாரணை பிற்பகலுக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
மீண்டும் விசாரணை தொடங்கியபோது, வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க பிப்ரவரி 16 வரையில் இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.�,”