bவனத்துக்கு இடம் மாறும் 60 நகர மான்கள்!

Published On:

| By Balaji

சென்னையில் மீட்கப்பட்ட 60 புள்ளி மான்கள் வனத்தில் பாதுகாப்பாக விடப்படுவதாகத் தமிழ்நாடு தலைமை வனப் பாதுகாவலரான சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

தரமணி, ஆதம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி, பெருங்குடி, சைதாப்பேட்டை, அடையாறு, கோட்டூர்புரம், நந்தனம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் 1,500க்கும் மேற்பட்ட புள்ளி மான்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றன. இவை வாகனங்களில் அடிபட்டும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை உண்டும் மரணமடைகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 60 புள்ளி மான்கள் மீட்கப்பட்டு வனப்பகுதிகளில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளன. நகரத்தில் சுற்றித் திரியும் மான்கள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதையும் பிளாஸ்டிக் பொருட்களை உண்டு மரணமடைவதையும் தடுக்க, புள்ளி மான்களுக்கான இனப்பெருக்கம் குறைந்துள்ள களக்காடு – முண்டந்துறை காடுகளில் இம்மான்களை விடுவதற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின் பேரில் முதற்கட்டமாக 10 புள்ளி மான்கள் வாகனத்தில் வைத்து ஜூன் 20ஆம் தேதி களக்காடு – முண்டந்துறை வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டன. இந்நிலையில் மேலும் 60 புள்ளி மான்கள் களக்காடு – முண்டந்துறை வனப்பகுதியில் விடப்படுவதாகத் தமிழ்நாடு முதன்மை தலைமை வனப் பாதுகாவலரான சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா *டைம்ஸ் ஆஃப் இந்தியா* ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். முண்டந்துறையில் கடைசியாக விடப்பட்ட 10 புள்ளி மான்களில் ஒரு மான் சிறுத்தைப் புலியால் தாக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதால் மற்ற மான்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சஞ்சய் குமார் ஸ்ரீவஸ்தவா பேசுகையில், “இந்த மான்களைக் குறைந்தது ஒரு மாதமாவது நாங்கள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். இவை பாதுகாப்பாக இருப்பது உறுதிசெய்யப்பட்டால்தான் அடுத்த கட்ட மான் குழுக்களை அங்கு இடமாற்றம் செய்ய முடியும். கிண்டி சிறுவர் பூங்காவில்தான் மீட்கப்பட்ட மான்களுக்குத் தற்போது அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது. இம்மான்கள் அனைத்தும் ஒவ்வொரு குழுக்களாகத்தான் இடமாற்றம் செய்யப்படும். இவற்றை எங்கு விடுவது என்பது குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை” என்றார்.

சென்னைக்கு அருகில் உள்ள வனப்பகுதிகளில்தான் இவற்றை விடுவதற்கு முதலில் முடிவுசெய்யப்பட்டதாகவும், ஆனால் இங்கு தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் வேறு இடங்களுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share