bராகிங்: விஷம் குடித்த 2 மாணவர்கள் பலி!

Published On:

| By Balaji

ராகிங் பிரச்சினையினால் விஷம் குடித்த மதுரை தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களில் ஒருவர் இன்று உயிரிழந்தார்.

மதுரை தெப்பக்குளம் அருகே அரசு உதவி பெறும் கல்லூரியொன்றில் முதலாமாண்டு பொருளாதாரம் படித்து வந்தனர் முத்துப்பாண்டி, பரத் என்ற இரண்டு மாணவர்கள். கடந்த சில நாட்களாக, இவர்களைச் சில மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் முத்துப்பாண்டியும் பரத்தும் மனமுடைந்தனர். கடந்த 2ஆம் தேதியன்று, இவர்கள் இருவரும் விஷம் குடித்தனர்.

இதையடுத்து, இவர்கள் இருவரும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னர், பரத் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த நிலையில், இன்று (மார்ச் 16) இன்று மாணவர் முத்துப்பாண்டியும் உயிரிழந்தார். சிகிச்சை அளிக்கப்பட்டபோது, அவர் வீடியோவொன்றை வெளியிட்டார். அதில், பரத்தும் தானும் விஷம் குடிப்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனை அடிப்படையாகக் கொண்டு, வழக்குப் பதிவு செய்தனர் தல்லாகுளம் போலீசார்.

முத்துப்பாண்டி, பரத் இருவரையும் ராகிங் செய்த குற்றச்சாட்டில், ஜெயசக்தி என்ற மாணவரைத் தேடி வருகின்றனர் போலீசார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share