Bரசிக்க வைக்கும் ராஸ்கல்!

Published On:

| By Balaji

?

நடிகர் அரவிந்த் சாமி போகன் திரைப்படத்தில் செய்த ரகளையான கேரக்டரை அப்படியே செய்யுங்கள் என சித்திக் சொல்லியே அவரை பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தில் கமிட் செய்திருக்க வேண்டும். மலையாளத்தில் மிகப் பெரிய ஹிட் அடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைப்படத்தை எந்த மாற்றமும் இல்லாமல் தமிழில் நட்சத்திரங்களை மட்டும் மாற்றி எடுத்திருக்கிறார். அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைனிகா ஆகியோரைக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் தலைப்பும் மலையாளத்துக்கு (பாஸ்கர் தி ராஸ்கல்) பக்கத்தில்தான் இருக்கிறது.

அரவிந்த் சாமியின் தோற்றமும், வசனங்களும், குழந்தைகளின் ஆதிக்கமும் நிறைந்ததாக வெளியாகியிருக்கும் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள அனைத்துக் காட்சிகளுமே ரசிக்கக்கூடியவையாக இருக்கின்றன. நடிகர் சூரி முதற்கொண்டு, ரமேஷ் கண்ணா வரையிலும் ஒரு நல்ல கேரக்டர் ரோல் கிடைத்திருப்பது நிம்மதியைக் கொடுக்கிறது. தெறி படத்தில் ரசிகர்களைக் கவர்ந்த பேபி நைனிகா மீண்டும் தனது அதட்டலான வசனங்களின் மூலம் ரசிக மனங்களை மீண்டும் கொள்ளை கொள்வார் எனத் தெரிகிறது.

[பாஸ்கர் ஒரு ராஸ்கல் -ட்ரெய்லர்!](https://www.youtube.com/watch?v=A89zEyYrmjA)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel