bமோடி வெற்றி: போக்குவரத்து மேம்படுமா?

Published On:

| By Balaji

பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்கவுள்ளதால், தேர்தல் வாக்குறுதியின்படி, போக்குவரத்துத் துறை மேம்பாட்டுக்கு ரூ.30 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் சாலை, ரயில்வே உள்ளிட்ட உள்கட்டுமானத் துறைகளுக்கு ரூ.100 லட்சம் கோடி வரையில் செலவிடப்படும் என்று வாக்குறுதி வழங்கப்பட்டது. அதன்படி, சாலைப் போக்குவரத்து மேம்பாட்டுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.30 லட்சம் கோடி வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலை மேம்பாட்டுக்கு ரூ.30 லட்சம் கோடியும், ஆற்றல் துறைக்கு ரூ.20 லட்சம் கோடியும், நகர்ப்புற உள்கட்டுமானம் மற்றும் வீடமைப்புத் திட்டத்துக்காக ரூ.12 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.10 லட்சம் கோடியும், பாதுகாப்புத் துறை நவீனமயமாக்கலுக்காக ரூ.9 லட்சம் கோடியும், டிஜிட்டல் துறைக்கு ரூ.7 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.5 லட்சம் கோடியும், சுரங்கத் துறைக்கு ரூ.5 லட்சம் கோடியும், கல்வித் துறைக்கு ரூ.1 லட்சம் கோடியும், சுற்றுலாத் துறைக்கு ரூ.1 லட்சம் கோடியும் செலவிடப்படவுள்ளது.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[டிஜிட்டல் திண்ணை: அரசியலில் ரஜினி, கமலை இணைக்க இளையராஜா முயற்சி!](https://minnambalam.com/k/2019/05/24/93)

**

.

**

[ஓ.பன்னீரின் ‘பொதுச் செயலாளர்’ திட்டம்: அதிர்ச்சியில் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/05/25/30)

**

.

**

[தேர்தல் முடிவு: தினகரனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை!](https://minnambalam.com/k/2019/05/25/20)

**

.

**

[ராஜ்யசபா: அன்புமணியின் அடுத்த மூவ்!](https://minnambalam.com/k/2019/05/24/9)

**

.

.

**

[திமுக எம்.பி.க்களின் ரகசிய புலம்பல்!](https://minnambalam.com/k/2019/05/24/30)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share