இந்தியாவுக்குக் குறைந்த எண்ணிக்கையிலான மற்றும் பலம் வாய்ந்த வங்கிகள் தேவை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய ரிசர்வ் வங்கியின் வழக்கமான கூட்டம் இன்று (பிப்ரவரி 18) டெல்லியில் நடந்தது. வங்கிகள் இணைப்பு நடவடிக்கை அவசியமானது என்று இந்தக் கூட்டத்தில் அருண் ஜேட்லி பேசியுள்ளார். 2017ஆம் ஆண்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வங்கியுடன் பாரதிய மஹிளா வங்கியும், எஸ்பிஐயின் துணை வங்கிகளும் இணைக்கப்பட்டன. தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பரோடா வங்கியின் இணைப்புக்கு கடந்த மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து அருண் ஜேட்லி பேசுகையில், “வங்கிகள் இணைப்புக்கு எஸ்பியுடன் இணைக்கப்பட்ட சில வங்கிகளின் கடந்த கால அனுபவங்கள் உதவுகின்றன. தற்போது இரண்டாவது முறையாக சில வங்கிகளின் இணைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான மற்றும் மெகா வங்கிகள் தேவைப்படுகின்றன. ஏனென்றால் அவை எல்லா விஷயத்திலும் வலுவாக இருக்கின்றன. கடன் விகிதத்திலிருந்து உகந்த பயன்பாடுகள் வரை வங்கித் துறையின் பொருளாதார அளவீட்டுக்கு இது உதவும்” என்றார்.
தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பரோடா வங்கி ஆகிய வங்கிகளின் இணைப்பானது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த இணைப்புக்குப் பிறகு பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆகக் குறைந்துவிடும்�,