தமிழ் சினிமாவில் மார்ச் 8ஆம் தேதியன்று அதர்வா நாயகனாக நடித்துள்ள பூமராங், பரியேறும் பெருமாள் வெற்றிக்குப் பின் கதிர் காவல் அதிகாரியாக நடித்துள்ள சத்ரு, பரத் நடித்துள்ள பொட்டு, புதுமுகங்கள் நடித்துள்ள கபிலவஸ்து என நான்கு படங்கள் வெளியானது.
கடந்த வாரம் 310 தியேட்டர்களில் வெளியாகி வசூல் குறையாமால் ஓடிக்கொண்டிருந்த தடம் திரைப்படம் 200 திரைகளுக்கு மேல் இரண்டாவது வாரம் தொடர்வதால், சுமார் 600 திரைகளை இந்த நான்கு படங்களும் பங்கு போட்டுக்கொண்டன.
வணிக ரீதியாக மேற்குறிப்பிட்ட எந்தப் படமும் அவுட் ரேட், விநியோக அடிப்படையில் வியாபாரம் ஆகவில்லை. வசூல் ரீதியாக எதிர்பார்க்கப்பட்ட பூமராங், பொட்டு, சத்ரு என மூன்று படங்களுக்கும் எந்த தியேட்டரிலும் ஓபனிங் இல்லை.
ஒரு படத்தில் நடிக்க 2 கோடி ரூபாய் சம்பளத்துடன், அதற்குரிய ஜிஎஸ்டி வரியையும் சேர்த்துக் கேட்கும் அதர்வா நடித்துள்ள பூமராங், அவர் வாங்குகிற சம்பள தொகைக்குக் கூட கடந்த மூன்று நாட்களில் வசூல் மூலம் வருவாயாகக் கிடைக்கவில்லை.
மொத்தத்தில் நான்கு படங்களும் முதல் நாளே தியேட்டர்களில் வசூல் ரீதியாக முடங்கிப் போனது. சுமார் 15 கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு படங்களும் மூன்றில் ஒரு பங்கு தொகைக்கும் குறைவாகவே முதல் மூன்று நாட்களில் மொத்த வசூலாகியுள்ளது.�,