Bபோணியாகாத ரசாயன உரங்கள்!

Published On:

| By Balaji

தேவைக்குக் குறைவான அளவில் ரசாயன உரங்கள் விற்பனையாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு காரிஃப் பருவத்தில் ரசாயன உரங்களுக்கான தேவை 12 மில்லியன் டன்னாக இருந்ததாகவும், 10.9 மில்லியன் டன் அளவிலான ரசாயன உரங்கள் விற்பனையாகியுள்ளதாகவும் ரசாயனம் மற்றும் உரத் துறை இணையமைச்சரான ராவோ இந்தெர்ஜித் சிங் ஜூலை 24ஆம் தேதியன்று மக்களவையில் தெரிவித்துள்ளார். இதே காலகட்டத்தில் கடந்த மாதம் வரையில் ரூ.16,765 கோடி மதிப்பிலான மானியங்களை உரத் துறை வழங்கியுள்ளதாகவும் ராவோ இந்தெர்ஜித் சிங் தனது எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வழங்கிய தகவல்களின்படி, நாடு முழுவதிலும் விவசாயிகள் 6.46 மில்லியன் டன் யூரியாவையும், 4.49 மில்லியன் டன் அளவிலான பாஸ்பேட்டிக் & பொட்டாஸிக் உரங்களையும் வாங்கியுள்ளனர். 2017-18ஆம் ஆண்டில், 30.3 மில்லியன் டன் அளவிலான யூரியாவும், 29.85 மில்லியன் டன் அளவிலான பாஸ்பேட் & பொட்டாஸிக் உரங்களும் விற்பனையாகியுள்ளன. அதே ஆண்டில், ரூ.69,198 கோடி மதிப்பிலான மானியங்களை அரசு வழங்கியுள்ளது. உயிரி உரங்களை உற்பத்தி செய்வதற்கான அமைப்புகளை நிறுவ, மாநில அரசுகளுக்கு 100 விழுக்காடு நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருவதாக அவர் கூறினார். அதிகபட்சமாக, ஒரு யூனிட் (50,000 லிட்டர் வருடாந்திர உற்பத்தித் திறன்) உயிரி உர உற்பத்திக்கு ரூ.160 லட்சம் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment