�
ராஜஸ்தானில் காதலர் தினமானது பெற்றோர் தினமாக மாற்றப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம்தேதி காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாச்சாரம் என்று கூறி அதை ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினர் ஏற்றுக்கொள்வதில்லை. இந்த இரு கட்சிகளின் கலாச்சார அமைப்புகள் காதலர் தினத்தன்று காதலர்களை அடித்து உதைப்பது, மிரட்டுவது கழுதைக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தானில் காதலர் தினத்திற்கு தடை விதிக்கப்பட்டு அதற்கு பதிலாக பெற்றோர் தினம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவில் பிப்ரவரி 14ஐ தாய்-தந்தை தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவானது வளர் இளம் பருவத்தினர் மத்தியில் காதலா் தினம் என்ற பெயரில் ,மேற்கத்திய கலாச்சாரம் பரவி வருவதை தடுக்கும் நோக்கத்துடன் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
�,